Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட ரத்தக்கடிதம் எழுதிய விளையாட்டு வீராங்கனை

Advertiesment
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட ரத்தக்கடிதம் எழுதிய விளையாட்டு வீராங்கனை
, ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (09:31 IST)
கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்தில் இருந்த 6 பேர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து பேருந்தில் இருந்து தூக்கி எறிந்தனர். இதில் படுகாயமடைந்த நிர்பயா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உடனடியாக வழங்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பெண் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் குரலெழுப்பினர். 
 
நிர்பயா குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நான்கு ஆண்டுகள் நடைபெற்று பின்னர் அவர்களுக்கு தூக்கு தண்டனை என தீர்ப்பு அளிக்கப்பட்டது. தூக்கு தண்டனை குறித்த தீர்ப்பு வெளியாகி இரண்டு வருடங்களாகியும் இன்னும் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. கவர்னரிடம் கருணை மனு, குடியரசுத் தலைவரிடம் கருணை மனு , என காலந்தள்ளி கொண்டே போய், தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் நிர்பயா குடும்பத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்
 
webdunia
இந்த நிலையில் சமீபத்தில் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் 4 பேர்களும் பத்தே நாட்களில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர் இதனால் எழுச்சி அடைந்த பொதுமக்கள் நிர்பயா குற்றவாளிகளுக்கும் உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றனர் 
 
இந்த நிலையில் நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தூக்கு தண்டனை நிறைவேற்ற சிறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் இடும் பணியை மேற்கொள்ள அனுமதி கோரி ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார் ஒரு விளையாட்டு வீராங்கனை. சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் என்பவர்தான் இந்த ரத்தக்கடிதம் எழுதியுள்ளார் என்பதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு  அவர் எழுதியுள்ள ரத்தக்கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கழிப்பறையில் ஒழுங்காக சிறுநீர் கழிக்கத் தெரியாத சிறுமி – கொலை செய்த காப்பாளர் !