Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எண்ணி 21 நாட்களில் தூக்கு... யாரும் செய்யாதை சாதிக்கப்போகும் ஜெகன்!

Advertiesment
எண்ணி 21 நாட்களில் தூக்கு...  யாரும் செய்யாதை சாதிக்கப்போகும் ஜெகன்!
, வியாழன், 12 டிசம்பர் 2019 (12:32 IST)
பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்னும் மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. 
 
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்து கொண்டிருந்த நிலையில் கைதிகளை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது தெலுங்கானா போலீஸ். 
 
இதனைத்தொடர்ந்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதை பாராட்டியுள்ளதோடு ஆந்திராவில் இதுபோன்ற பாலியல் கொடுமைகளை தடுக்கவும் புதிய சட்டம் இயற்றப்படும் என தெரிவித்தார். 
 
ஆம், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களை ஒரு வாரத்தில் விசாரிக்கவும், இரண்டு வாரத்தில் தூக்கிலிடவும் சட்டம் இயற்றப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். 
 
அதன்படி பாலியல் குற்றச்சாட்டுக்க்கு உள்ளானவர்கள் மீதான வழக்குகள் ஒரு வாரத்திற்குள் விசாரிகப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படுபவர்களுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை வழங்க புதிய மசோதா வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
 
இதனையடுத்து மசோதா ஆந்திர சட்டபேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசாம் போராட்டம் எதிரொலி! – கிரிக்கெட் போட்டி ரத்து!