Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிகளுடன் வந்த லாரி; அனாமத்தாய் விட்டு சென்ற டிரைவர்! – மத்திய பிரதேசத்தில் பரபரப்பு!

Webdunia
சனி, 1 மே 2021 (13:12 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய பிரதேசத்தில் தடுப்பூசி கொண்டு சென்ற லாரி அனாமத்தாக சாலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி விநியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கபூர் மாவட்டத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான 2.4 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் சாலையில் ஆளின்றி நின்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த வாகனத்தின் டிரைவரை காணாத நிலையில் இதுகுறித்து அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு.. மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகளின் விவரங்கள்..!

இன்று காலை 10 மணி வரை வெளுத்து வாங்கும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

இன்று முதல் நாடாளுமன்ற கூட்டம்.. வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments