Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு.. ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகளை காணவில்லை. 4 பேர் பலி..!

Siva
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (16:46 IST)
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள ஹர்சிலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள தராலி கிராமத்தில், இன்று பிற்பகல் 1:45 மணியளவில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பால் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 4 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.  
 
சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்த காட்சிகளில், மலைகளில் இருந்து நீர் மற்றும் பாறை துண்டுகள் வெள்ளம்போல் அடித்துவரப்பட்டு, பல வீடுகளை அடித்து செல்வது பதிவாகியுள்ளது. இந்த நிலச்சரிவு, முக்ஃபாவில் உள்ள கங்கா ஜி-யின் குளிர்கால வாழிடமான கங்கோத்ரி தாம் கோயிலுக்கு மிக அருகில் நடந்துள்ளது.
 
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே இந்திய ராணுவ முகாம் இருந்ததால், ராணுவ வீரர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு,  15 பேரை காப்பாற்றியுள்ளனர்.
 
ஹர்சில் பகுதியில் உள்ள கீர் காத் கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதால் சேதத்தின் தீவிரம் அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள் சேதம் அடைந்ததாகவும், "ஹோட்டல்கள் முதல் சந்தைகள் வரை எல்லாம் அழிந்துவிட்டன என்றும்,  இதுபோன்ற ஒரு பேரழிவை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்று நேரில் கண்டவர் ஒருவர் கூறியுள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லா பண்ணுங்க.. வெற்றி உங்களுக்கு தான்.. விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த புதுவை முதல்வர்..!

இனிமேல் அமெரிக்கா செல்ல ரூ.13 லட்சம் டெபாசிட் பணம்.. விசா முடிந்தபின் தங்கினால் டெபாசிட் கிடைக்காதா?

கேரளாவில் தொடர் கொலைகள்? ஒரு கொலையில் சிக்கியவர் மேலும் 3 கொலைகளை செய்தாரா?

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments