Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிணற்றுக்குள் தவறி விழுந்து 11 பெண்கள் பலி! – உத்தர பிரதேசத்தில் சோகம்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (08:57 IST)
உத்தர பிரதேசத்தில் திருமணத்திற்கு சென்ற பெண்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் குஷிநகர் மாவட்டத்தை சேர்ந்த நிபுவா நவ்ரங்கடா என்ற கிராமத்தில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. அந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில் இரவு வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின் விருந்தினர்களில் சில பெண்கள் கிணற்றின் மேல் தளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார்கள்.

கிணற்றின் மேல் தளம் இரும்பு வலையால் மூடப்பட்டிருந்த நிலையில் அதன் மேல் 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஏறி அமர்ந்துள்ளனர். இதனால் திடீரென வலை பாரம் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றின் மேல் அமர்ந்திருந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஆழமான கிணற்றில் விழுந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 15க்கும் அதிகமான சிறுமிகள், பெண்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 11 பெண்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments