Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மசூதிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு காவல் துறை உத்தரவு..!

Siva
புதன், 12 மார்ச் 2025 (17:52 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஹோலி பண்டிகை முன்னிட்டு 10 மசூதிகளை தார்பாயால் மூட வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
 
60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக இந்து மக்களால் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையும், முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகையும் ஒரே நாளில், அதாவது மார்ச் 14ஆம் தேதி வருகிறது. இதனை அடுத்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் பகுதியில் ஜும்மா மசூதி உள்பட 10 மசூதிகளை தார்பாயால் மூட வேண்டும் என காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சம்பல் எஸ்.பி தெரிவித்துள்ளார்.
 
எந்தவித குழப்பமும் பதட்டமும் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சம்பந்தப்பட்ட 10 மசூதிகள் தார்பாயால் மூடி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments