மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் ஒரே மாமரத்தில் 121 வகை மாம்பழங்கள் காய்த்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள சஹரன்பூர் மாவட்டத்தில் தோட்டக்கலை அதிகாரிகள் மாமரம் ஒன்றை கடந்த 15 ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த மாமரத்தில் பல்வேறு வகை மாங்கனி வகைகளின் தண்டுகளை இணைத்து சோதனை முயற்சியாக அதை வளர்த்து வந்துள்ளனர்
.இந்நிலையில் தற்போது வெற்றிகரமாக அந்த மரத்தில் 121 வகை மாங்கனிகள் காய்த்துள்ளதாக தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி தேசிய அளவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.