Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவில் கட்ட நிதி தாங்க..! – அரசு ஊழியர்கள் சம்பளத்தில் கை வைக்கும் யோகி!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (16:23 IST)
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில் கட்டுமானத்திற்கு அரசு ஊழியர்கள் நிதி அளிக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

அயோத்தியில் ராமஜென்ம பூமி வழக்கில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் பல பகுதிகளில் உள்ள இந்து அமைப்புகள் தங்கத்திலான செங்கற்கள், கட்டுமான பணிக்கான நிதி என பலவற்றை ராமஜென்ம அறக்கட்டளைக்கு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் உத்தரபிரதேச அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச அரசு ஊழியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை ராமர் கோவில் பணிகளுக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதற்கு அம்மாநில எதிர்கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்
Show comments