இந்தியாவில் கொரோனாவிற்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் விரைவில் பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்கள பணியாளர்களே சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சம் தெரிவிப்பதால் முக்கிய அதிகாரிகள், அமைச்சர்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக இருப்பதாகவும், மக்கள் தடுப்பூசி கண்டு அஞ்ச வேண்டாம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டாவது கட்டமாக தடுப்பூசி போடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டாவது கட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் மாநில முதல்வர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.