இந்திய எல்லைக்கு சொந்தமான பகுதியில் சீனா குடியேற்றம் செய்துள்ளதற்கு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் அது தங்கள் பகுதி என சீனா சமாளித்து வருகிறது.
இந்தியா – சீனா இடையேயான எல்லை தகராறு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. முன்னதாக லடாக் எல்லையில் சீன – இந்திய வீரர்களிடையே நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அருணாச்சலபிரதேச எல்லையில் சீனா அத்துமீறி 100க்கும் மேற்பட்ட குடியுருப்புகளை அமைத்துள்ளது.
சீனாவின் இந்த செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறியுள்ள இந்தியா, இந்த செயலுக்காக சீனாவுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. ஆனால் சீன வெளியுறவுத்துறையோ குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி சீனாவுக்கு சொந்தமான எல்லை பகுதியே என தொடர்ந்து வாதிட்டு வருகிறது. இதனால் எல்லைப்பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது.