Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது: அரசின் அதிரடி உத்தரவு..!

Advertiesment
helmet

Siva

, திங்கள், 13 ஜனவரி 2025 (08:40 IST)
ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் கொடுக்க வேண்டும் என்றும் உத்தர பிரதேச அறிவித்துள்ளது.  

இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க உத்தரப்பிரதேச அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்க கூடாது என பெட்ரோல் நிலையங்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு போக்குவரத்து கமிஷனர் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் ’சாலை பாதுகாப்பு தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் விபத்துகள் அதிகரித்து வருவதும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதில் பெரும்பாலானோர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்பதும், ஹெல்மெட் அணியாததால் தான் இந்த உயிரிழப்பு நடைபெறுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக வலைதளங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட தளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.



Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி சப்டைட்டில் தேடி அலையத் தேவையில்லை! VLC கொடுத்த புது AI அப்டேட்!