உத்தர பிரதேசத்தில் கொரோனா வார்டில் பணியாற்றிய செவிலியரும், மருத்துவரும் மக்கள் முன்னரே சண்டை போட்டுக் கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பல மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும், மருத்துவ பணியாளர்கள் இல்லாததும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவருக்கும், அவருக்கு உதவியாக பணியாற்றிய செவிலியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மோசமான வார்த்தைகளால் இருவரும் பேசிக்கொண்ட நிலையில் செவிலியர் மருத்துவரை கன்னத்தில் அறைந்ததும், தொடர்ந்து மருத்துவர் செவிலியரை தாக்கியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சுற்றி இருந்த மக்கள் அவர்களை தடுத்து சண்டையை நிறுத்தியுள்ளனர்.
இதுகுறித்த விசாரணையில் இருவரும் அதிகமான வேலை பளுவால் மனசோர்வு அடைந்ததால் இவ்வாறான சண்டை நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.