Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதிர்கட்சி பிரமுகரின் மகளை இழுத்துக் கொண்டு ஓடிய பாஜக பிரபலம்!

எதிர்கட்சி பிரமுகரின் மகளை இழுத்துக் கொண்டு ஓடிய பாஜக பிரபலம்!
, வியாழன், 19 ஜனவரி 2023 (16:33 IST)
உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக கட்சியை சேர்ந்த 47 வயது பிரபலம் ஒருவர் எதிர்கட்சி பிரமுகரின் 25 வயது மகளை இழுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ஹர்தொய் மாவட்டத்தில் ஆளும் பாஜக அரசின் மாவட்ட பாஜக செயலாளராக இருந்து வந்தவர் ஆஷிஸ் சுக்லா. 47 வயதான இவருக்கு திருமணமாகி 21 வயதில் மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். ஆஷிஸ் சுக்லாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சமாஜ்வாடி கட்சி பிரமுகர் ஒருவரின் மகளுக்கும் இடையே சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

25 வயதான அந்த பெண்ணிடம் ஆஷிஸ் சுக்லா பழகிய நிலையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த சமாஜ்வாடி பிரமுகர் தனது மகளுக்கு வேறு இடத்தில் திருமண நிச்சயம் செய்துள்ளார். இதனால் அந்த பெண்ணை இழுத்துக் கொண்டி ஆஷிஸ் சுக்லா ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் வைரலான நிலையில் அவரை கட்சியை விட்டு நீக்குவதாக பாஜக அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து அவர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடி வருவதாக உத்தரபிரதேச போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்!