அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் கர்நாடக உள்பட ஒன்பது மாநிலங்களின் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று மூன்று மாநிலங்களின் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் அட்டவணை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று மாநிலங்களிலும் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பதை ஒரு சில மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த மூன்று மாநிலங்களின் தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.