Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியை கவிழ்க்க செப்டம்பர் எதுக்கு? இப்பவே செய்யுங்க! – பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (08:19 IST)
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக கூறியுள்ள உத்தவ் தாக்கரே வெளிப்படையான பதிலையும் அளித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜகவோடு சேர்ந்து சட்டசபை தேர்தலை எதிர்கொண்டாலும், பிறகு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது சிவசேனா. இந்நிலையில் சிவசேனாவின் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக அடிக்கடி சிவசேனா கட்சியினார் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே “மராட்டியத்தில் அமைந்துள்ள மகா விகாஷ் அகாடி கூட்டணியானது மூன்று சக்கரங்களை உடைய ஆட்டோவை போன்றது. இது மக்களுக்கான வாகனம். அதன் ஸ்டியரிங்கை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஆட்சி ஜனநாயகத்திற்கு எதிரானது என்றால், இந்த ஆட்சிடை கவிழ்க்க நீங்கள் திட்டமிடுவது மட்டும் ஜனநாயக முறையிலானதா? எங்கள் ஆட்சியை கவிழ்க்க ஏன் செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டும்? முடிந்தால் இப்போதே கவிழ்க்கலாமே” என கூறியுள்ளார்.

மேலும் “காங்கிரஸுடன் சிவசேனாவுக்கு ஏற்பட்டது சிறிய அளவிலான முரண்பாடுதான். அதையும் பேசி சரிசெய்தாகிவிட்டது. இதுகுறித்து சோனியாகாந்தியுடன் கலந்துரையாடினேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடுகளுக்கு ரூ.40, குழந்தைகளுக்கு ரூ.12.. மத்திய பிரதேச அரசின் நிதி ஒதுக்கீட்டால் சர்ச்சை..!

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. இந்தியா வருகிறார் புதின்.. டிரம்புக்கு எதிராக திட்டமா?

சென்னை விமான நிலையம் அருகே பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை.. ஐடி பொறியாளர் பரிதாப பலி!

5 மாதத்தில் ஒரு கோடி வாக்காளர்கள்.. தேர்தல் ஆணையம் மோசடி? - ராகுல்காந்தி ஆதரங்களுடன் பேட்டி!

தமிழகத்தின் மாநில கல்வி கொள்கை.. நாளை அறிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments