பிரதமரின் தையல் மெஷின் வழங்கும் திட்டத்தில் மெஷின் வாங்கி தருவதாக மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குஜராத்தின் அகமதாபாத் பகுதியில் பிரதமரின் தையல் மெஷின் அளிக்கும் திட்டத்தில் தையல் மெஷின் வாங்கி தருவதாய் ஆசாமி ஒருவர் பலரை ஏமாற்றியுள்ளார். பலரது வாட்ஸப் எண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டத்தில் தையல் இயந்திரம் அளிப்பதாக செய்தி வந்துள்ளது. கூடவே ஒரு தையல் மெஷினின் போட்டோவும் வந்துள்ளது. அந்த மெஷினை பெற வேண்டுமானால் புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும் எனவும், அதற்கு நடப்பு வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதை நம்பி பலர் வங்கி கணக்குகளை அளித்த நிலையில் அதிலிருந்த பணம் அபகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருவர் அகமதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம் போலீஸார் பரூச் பகுதியை சேர்ந்த டிராஜ் பிரஜாபதி என்பவரை கைது செய்துள்ளனர்.