யுபிஎஸ்சி என்று கூறப்படும் மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் அதாவது பிப்ரவரி 13 முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் துறைகளில் 47 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அதனை பூர்த்தி செய்ய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 4 ஆகும். விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21, அதிகபட்ச வயது 30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ. 200. ஆனால் மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் / எஸ்சி / எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை
இந்த தேர்வு குறித்த விரிவான விவரங்களை அறிந்துகொள்ள https://upsc.gov.in/sites/default/files/Notif-IES-ISS-Exam-2025-English-120225.pdf மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.gov.in/upsc/OTRP/ என்ற இணையதளத்தை அணுகவும்.