Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய அரசின் கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிப்பு: என்னென்ன தளர்வுகள்/

மத்திய அரசின் கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிப்பு: என்னென்ன தளர்வுகள்/
, புதன், 29 ஜூலை 2020 (19:33 IST)
மத்திய அரசின் கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிப்பு:
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த அன்லாக் 2.0 வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து சற்றுமுன் அன்லாக் 3.0 விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் பின்வருமாறு:
 
* இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் தீவிர லாக்டவுன் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன் தொடரும்
 
* யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பதற்கு ஆகஸ்ட் 5 முதல் அனுமதி
 
* பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இயங்காது
 
* சுதந்திர தின கொண்டாடட்டத்திற்கு அனுமதி உண்டு. ஆனால் சமூக இடைவெளியுடன் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்
 
* திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி இல்லை. இவைகளை திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்
 
* விளையாட்டு போட்டிகள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்