சர்க்கரை நோயை மாத்திரை மருந்தில்லாமல் குணப்படுத்திய அமித்ஷா.. 2 மணி நேரம் 6 மணி நேரம் ரகசியம்..!

Siva
திங்கள், 21 ஏப்ரல் 2025 (07:27 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் அதிலிருந்து முழுமையாக குணம் ஆகிவிட்டதாகவும், அதற்கான காரணம் "இரண்டு மணி நேரமும், ஆறு மணி நேரமும் ரகசியம் தான்" எனவும் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, "நான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தேன். ஆனால், சரியான நேரத்தில் தூங்குதல், சரியான உணவு, மற்றும் சரியான அளவில் தண்ணீர் எடுத்துக் கொண்டால், தற்போது சர்க்கரை நோயிலிருந்து விடுபட்டுள்ளேன்," என்று கூறினார்.

"தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் ஆறு மணி நேரம் தூக்கம் ஆகிய இரண்டும் மிகவும் அவசியம். இந்த இரண்டையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அதேபோல், தூய நீர், நல்ல உணவு ஆகியவற்றின் மூலம் எந்த நோயையும் நான் குணப்படுத்தி விடலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.

"இந்த ரகசியம் தான், தன்னுடைய நீண்ட கால சர்க்கரை நோயை குணப்படுத்தியது" எனவும், "தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனவும் அவர் கூறினார்.

மேலும், "இளைஞர்கள் அனைவரும் தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி, ஆறு மணி நேரம் தூக்கம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இது உடலுக்கும், மூளைக்கும் கிடைக்கும் ஒரு முக்கியமான பயிற்சி. இது மிகவும் பலன் தரும். இது என் சொந்த அனுபவம்," என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments