Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய வன உயிரியல் பூங்காக்களுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் எச்சரிக்கை!!

Advertiesment
இந்திய வன உயிரியல் பூங்காக்களுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் எச்சரிக்கை!!
, திங்கள், 6 ஏப்ரல் 2020 (14:24 IST)
உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், மனித உயிர்களை பலிக்கொண்டு வருகிறது. மேலும் நாடுகளின் பொருளாதார சூழ்நிலையையும் சீர்குலைத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் Bronx Zoo-வில் இருக்கும் அந்த புலிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த உயிரியல் பூங்காவில் உள்ள 6 புலிகளுக்கும் சிங்களுக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த உயிரியல் பூங்காவில் பணியாற்றிய ஊழியர்கள் யாருக்காவது கொரோனா இருந்து அவர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவி இருக்கும் என கூறப்படுகிறது. 

 
இந்த நிலையில், அமெரிக்கா வனஉயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று எதிரொலியை அடுத்து, இந்தியாவில் உள்ள வன உயிரியல் பூங்காகளுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் எச்சரிக்கை *  விடுத்துள்ளது.

மேலும், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தொடர்ந்து கண்காணிக்க அதன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட விலங்குகளை தனிமையில் வைத்து கண்காணிக்கவும், ஒருவேளை விலங்குகள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவற்றின்  ரத்த மாதிரிகளை உடனடியாக ஆய்வகங்களுக்கு அனுப்ப வைக்கவும் உத்தரவிட்டுள்ளது .

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூழ்நிலையை பொறுத்தே 10 ஆம் வகுப்பு தேர்வு குறித்து முடிவு - முதல்வர்