Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

#StandWithSuriya: அரசியல்வாதிகளுக்கு எதிராக டிரெண்டாகும் சூர்யா!!

Advertiesment
#StandWithSuriya: அரசியல்வாதிகளுக்கு எதிராக டிரெண்டாகும் சூர்யா!!
, செவ்வாய், 16 ஜூலை 2019 (09:29 IST)
நடிகர் சூர்யா கல்விக்கொள்கை குறித்து பேசியதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர். 
 
நடிகர் சிவக்குமார் மாணவர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துக்கொண்ட நடிகர் சூர்யா நுழைவு தேர்வுக்கு எதிராகவும், புதிய கல்வி கொள்கை மீதான தனது அதிருப்தி கருத்துக்களையும் வெளிப்படுத்தினார். 
 
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜகவை சேர்ந்த எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக அமைச்சர்கள் என அனைவரும் சூர்யாவுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தனர். 
webdunia
இதனால், தற்போது சூர்யா ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சூர்யாவின் கருத்தை ஏற்கும் மக்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் #SuriyaFCWarnsBJPnADMK மற்றும் #StandWithSuriya என்ற ஹேச்க்டேக்குகள் காலை முதல் டிவிட்டரில் டாப் டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவில் இணையும் முன்னாள் பிரதமரின் மகன்!