இந்தியாவில் உள்ள 32 லட்சம் கோயில்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுவரை எந்த நாடும் செய்யாத முன்னோடி திட்டமாக இது இருக்கும் என்றும், இந்தியாவில் உள்ள 32 லட்சம் கோயில்களுடன் வெளிநாட்டு கோயில்களையும் ஒரே கூட்டமைப்பின் கீழ் கொண்டு வர முயற்சி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள கோயில்களில் ஆறு லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் உள்ள நிலையில், ஒரே நெட்வொர்க் சங்கிலியின் கீழ் கொண்டு வந்தால் மக்கள் எளிமையாகவும் வெளிப்படையான முறையில் அணுக முடியும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து பிப்ரவரி 17 முதல் 19 வரை திருப்பதியில் நடைபெறும் சர்வதேச கோயில் மாநாட்டில் விரிவாக ஆலோசனை செய்யப்படும் என்றும், நாடு முழுவதும் உள்ள கோயில்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஒருங்கிணைப்பில் இந்து மத கோயில்கள் மட்டுமின்றி, சீக்கிய, புத்த, ஜெயின் கோயில்களையும் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. . "ஒரே நாடு, ஒரே கோயில் நிர்வாகம்" என்ற இந்த முயற்சி எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.