Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைன் செல்லவுள்ள இந்திய விமானபடையின் சி-17 விமானத்தின் முக்கிய அம்சங்கள்!

உக்ரைன் செல்லவுள்ள இந்திய விமானபடையின் சி-17 விமானத்தின் முக்கிய அம்சங்கள்!
, செவ்வாய், 1 மார்ச் 2022 (15:06 IST)
உக்ரைன் செல்லவுள்ள இந்திய விமானபடையின் சி-17 விமானத்தின் முக்கிய அம்சங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்... 

 
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து பல நாட்டு மக்களும் எல்லைகள் வழியாக அண்டை நாடுகள் சென்று சொந்த நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
 
இந்திய மக்கள் அண்டை நாடுகள் வழியாக ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் விமானம் வழியாக இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில் உக்ரைனில் போர் உக்கிரமடையும் சூழல் உள்ளது. இதனால் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படையில் பெரிய விமானமான போயிங் சி17 ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மேலும் இந்த விமானத்தில் உக்ரைன் மக்களுக்கு உதவும் நல் எண்ணத்தின் பேரில் மருந்துகள், உணவுப்பொருட்களை அனுப்பி வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அத்னபடி ஆபரேஷன் கங்கா திட்டத்தில் இன்று முதல் இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானங்கள் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்நிலையில் உக்ரைன் செல்லவுள்ள இந்திய விமானபடையின் சி-17 விமானத்தின் முக்கிய அம்சங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
1. 1980களில் உருவாக்கப்பட்ட இந்த விமானம் 1990களில் தான் முதன் முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. 
2. ஆயுதங்கள், வாகனங்கள் மட்டுமல்லாது போரில் பயன்படுத்தப்படும் டாங்கிகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
3. தற்போது இந்திய விமாப்படையிடம் 11 போயிங் சி 17 குளோப்மாஸ்டர்- 3 வகை விமானங்கள் உள்ளன. 
4. இந்த விமானத்தை இயக்குவது மூவர் குழூ. அவர்கள் இரண்டு பேர் விமானிகள். மூன்றாவது நபர் லோட் மாஸ்டர். 
5. இறக்கையின் அளவு: 51.74 மீ, நீளம்: 53.04 மீ, உயரம்: 16.79 மீ, சுமக்கக்கூடிய எடை: 74,797 கிலோ, இருக்கை எண்ணிக்கை: 102, வேகம்: 830 கி.மீ

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்கிவ் மீது ஏவுகணையால் தாக்கிய ரஷ்யா! – அதிர்ச்சியளிக்கும் வீடியோ!