உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தொடர்ந்துள்ள ரஷ்யா, கார்கிவ் பகுதியில் நடத்தியுள்ள தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து பல நாட்டு மக்களும் எல்லைகள் வழியாக அண்டை நாடுகள் சென்று சொந்த நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
போரை நிறுத்தும் நோக்கில் நேற்று பெலாரஸில் நடந்த உக்ரைன் – ரஷ்யா பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனால் ரஷ்யா, உக்ரைனின் பகுதிகளில் தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைனின் கார்கிவ் பகுதிக்குள் ரஷ்ய ராணுவம் புகுந்த நிலையில் அங்குள்ள சுதந்திர நினைவு கட்டிடம் அருகே ஏவுகணை விழுந்து வெடிக்கும் வீடியோ வெளியாகி பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.