Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

600 பேர் பணி நீக்கம்; ஓலாவை தொடர்ந்து ஊபர் அதிரடி முடிவு!

600 பேர் பணி நீக்கம்; ஓலாவை தொடர்ந்து ஊபர் அதிரடி முடிவு!
, செவ்வாய், 26 மே 2020 (12:40 IST)
வாடகை கார் நிறுவனமாக ஊபர் நிறுவனம் தனது பணியாளர்கள் 600 பேரை பணி நீக்கம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் வாடகை கார் நிறுவனங்களான ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பயணிகள் இன்றி முடங்கி போயுள்ளன. சமீபத்தில் ஓலா நிறுவனம் தனது ஊழியர்களில் 1,400 பேரை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் தற்போது ஊபர் நிறுவனமும் தனது ஊழியர்களில் 600 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த ஊழியர்கள் ஊபர் வாடிக்கையாளர் சேவை, ஓட்டுனர் ஆதரவு பிரிவு, வர்த்தக மேம்பாடு ஆகிய பிரிவுகளில் பனிபுரிந்தவர்கள் ஆவர்.

இவர்களுக்கான 10 வார கால ஊதியம், அடுத்த 6 மாதங்களுக்கான காப்பீடு ஆகியவை வழங்கப்படும் என ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உஷார் ஆவதற்குள் ஊருக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்! – அதிர்ச்சியில் இந்தியா!