Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உஷார் ஆவதற்குள் ஊருக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்! – அதிர்ச்சியில் இந்தியா!

Advertiesment
உஷார் ஆவதற்குள் ஊருக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்! – அதிர்ச்சியில் இந்தியா!
, செவ்வாய், 26 மே 2020 (12:15 IST)
ஆப்பிரிக்க வெட்டுக்கிளிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்னரே இந்தியாவிற்குள் நுழைந்து விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி பல நாடுகள் வழியாக பயணித்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் புகும் இந்த வெட்டுக்கிளிகள் மனித உணவு உற்பத்தியில் கணிசமான தொகையை அழித்துவிடக் கூடியவை. இந்த வெட்டுக்கிளிகள் இந்த மாத இறுதியில் இந்தியாவிற்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்பட்டது, இந்த வகை வெட்டுக்கிளிகளால் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விவசாயம் பெரும் பாதிப்பை சந்திக்கிறது.
webdunia

இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு பாகிஸ்தானுடன் இணைந்து செயலாற்ற திட்டமிட்டு வருவதாக இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே வெட்டுகிளிகள் இந்தியாவிற்குள் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தின் பன்னா பகுதியில் புகுந்துள்ள இந்த வகை வெட்டுக்கிளிகள் மரங்களிலும், வயல்வெளிகளிலும் படர்ந்துள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. மேலும்  ராஜஸ்தானின் ஜான்சி நகர பகுதிகளிலும் இவை அதிகமான அளவில் காணப்படுகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்தே மக்கள் இன்னமும் மீளாத சூழலில் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திவாலானது லடாம் ஏர்லைன்ஸ்: அதிர்ச்சியில் சக விமான நிறுவனங்கள்!