Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலியோவை மீண்டும் பரப்ப திட்டமா?

போலியோவை மீண்டும் பரப்ப திட்டமா?
, வியாழன், 4 அக்டோபர் 2018 (11:27 IST)
இந்தியாவில் மீண்டும் போலியோவைப் பரப்ப போலியோ சொட்டு மருந்திலேயே வைரஸ் கலப்பு செய்யப்படுவதாக தகவல்

இந்தியா உடபட உலக நாடுகள் பலவற்றிலும் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஒரு நோயாகக் கருதப்பட்டு வருகிறது. இந்தியா அரசு ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வோரு வருடமும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து இலவசமாக அளித்து வருகிறது.

தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் வைக்கப்பட்டு இருந்த மாதிரி போலியோ சொட்டு மருந்துகளை பரிசோத்திதுப் பார்த்தபோது அவற்றில் போலியோவைப் பரப்பும் டைப் 2 வகை வைரஸ் இருப்பது உறுதியானது.

இந்திய அரசு பயோமெட் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்தே தடுப்பூசி மற்றும் தடுப்பு மருதுகளை மொத்தமாக வாங்குகிறது. அந்த நிறுவனம் இந்திய அரசைத் தவிர வேறு யாருக்கும் மருந்து விற்பனை செய்வதில்லை. இதையடுத்து மத்திய மருந்து சீராய்வகம் அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிந்து அதன் நிர்வாக இயக்குனரை கைது செய்துள்ளது.
இந்திய மருத்துவ சீராய்வகம், மருந்து தயாரிக்கும் எல்லா தனியார் நிறுவனங்களையும் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே டைப் 2 வைரஸ் மற்றும் அது சம்பந்தபட்ட அனைத்து சமபந்தமான மூலக்கூறுகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. பயோ மெட் நிறுவனம் எவ்வாறு டைப் 2 வைரஸ் கலப்படம் செய்தது எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்துக்கள் தான் அதை செய்ய வேண்டும்: மீண்டும் அறநிலைத்துறையை வம்பிழுத்த எச்.ராஜா!!