Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்ந்து கார் விபத்தில் சிக்கும் தெலுங்கு தேச கட்சியினர்!!! மேலும் ஒருவர் பலி

Advertiesment
தொடர்ந்து கார் விபத்தில் சிக்கும் தெலுங்கு தேச கட்சியினர்!!! மேலும் ஒருவர் பலி
, வியாழன், 4 அக்டோபர் 2018 (07:44 IST)
அமெர்க்காவில் நடைபெற்ற கார்விபத்தில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் எம்.எல்.சி.யாக இருந்து வந்த மூர்த்தி என்பவர் பரிதாபமாக பலியானார்.
சமீபகாலமாக தெலுங்கு தேசக் கட்சியை சார்ந்த பலர் கார் விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றனர். என்.டி.ராமாராவின் மகனும், தெலுங்குதேசக் கட்சியின் மூத்த தலைவருமான ஹரிகிருஷ்ணா சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி பலியானார்.
 
இந்நிலையில் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் எம்.எல்.சி.யாக இருந்து வந்த மூர்த்தி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவர் காரில் சென்ற போது அவரது கார் லாரி ஒன்றுடன் பயங்கரமாக மோதியது. இதில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தெலுங்கு தேசக் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே இடத்தில் 150 எழும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு - அதிர்ச்சியில் பொதுமக்கள்