இன்று ஒரே நாளில் இரண்டு ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் கோளாறு ஏற்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை டெல்லியில் இருந்து துபாய் கிளம்பிய விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் தரையிறக்கப்பட்டது
இந்த நிலையில் இன்று மாலை குஜராத்தில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது
விமானத்தின் துணை விமானி பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் தரையிறக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டது.
ஒரே நாளில் இரண்டு ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் கோளாறால் பயணிகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.