ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளதால் இந்தியாவில் ட்விட்டர் பயன்பாடு அதிகரிக்கும் என முன்னாள் ட்விட்டர் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கியது உலகம் முழுவதும் பெரும் பேசு பொருளாகியுள்ளது. எலான் மஸ்க் வாங்கியுள்ளதால் இனி ட்விட்டர் நிறுவனத்தின் நடவடிக்கைகள் எந்த வகையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் ட்விட்டரின் வளர்ச்சி குறித்து பேசிய ட்விட்டரின் முன்னாள் இந்திய தலைவரான மணீஷ் மகேஸ்வரி கூறியபோது “ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் தலைமையில் இந்தியாவில் ட்விட்டர் வளர்ச்சி அடையும். ட்விட்டர் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியா ஒரு முக்கிய சந்தையாகும். வரும் காலங்களில் இந்தியாவில் ட்விட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.