Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி ரிவார்டு புள்ளிகளை பணமாக்கி கொள்ளலாம்.. டிஜிட்டல் பேமெண்ட்டில் புதிய புரட்சி செய்யும் செயலி..!!

Advertiesment
TWID UPI App

Mahendran

, புதன், 8 அக்டோபர் 2025 (14:37 IST)
ரிவார்டு அடிப்படையிலான பேமெண்ட் நெட்வொர்க் நிறுவனமான TWID, தனது புதிய TWID UPI செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் முதல் முறையாக, பயனர்கள் தங்கள் ரிவார்டு புள்ளிகளை பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனைகள் செய்ய அனுமதிக்கிறது.
 
பல வங்கிகள் மற்றும் பிராண்டுகளிடமிருந்து பெற்ற ரிவார்டு புள்ளிகளை பயனர்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கலாம்.  யுபிஐ மூலம் பணம் செலுத்தும்போது, இந்த புள்ளிகளை இணைத்து பயன்படுத்தலாம். இது புள்ளிகளை உடனடி சேமிப்பாக மாற்றுகிறது.ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் பயனர்கள் புள்ளிகளை சம்பாதிக்கலாம்.
 
இந்த செயலி, பயன்படுத்தப்படாமல் காலாவதியாகும் ரிவார்டு புள்ளிகளை பணம் போல மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதுகுறித்து TWID இணை நிறுவனர் அமித் கோஷல் கூறுகையில், "ரிவார்டு புள்ளிகளை ஸ்கேன் & பேமெண்ட்டுகளுக்கான 365 நாள் சேமிப்பாக மாற்றுவதன் மூலம் ஆஃப்லைன் டிஜிட்டல் பேமெண்ட்டுக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கிறோம்," என்று கூறினார்.
 
கூகுள் போன்ற முதலீட்டாளர்களின் ஆதரவுடன், TWID தற்போது ஸ்விக்கி, ஜியோமார்ட் உட்பட ஒரு லட்சம் வணிக நிறுவனங்களில் இணைக்கப்பட்டு, ரூ.19,100 கோடிக்கு அதிகமான ரிவார்டு புள்ளிகளை பயன்படுத்த உதவுகிறது.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே இரவில் கோடீஸ்வரர்: பெயிண்ட் கடை ஊழியருக்கு ரூ. 25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி! மறுநாளே வேலைக்கு சென்ற அதிசயம்..!