Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகையை காரில் இருந்து தூக்கி வீசிய டிரைவர் கைது!

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (07:30 IST)
தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பிற்கு ஒரு தனியார் நிறுவன வாடகை காரில் சென்ற நடிகை ஸ்வஸ்திகா தத்தாவை அவர் சென்ற காரின் ஓட்டுனர் தூக்கி வீசியதாக ஸ்வஸ்திகா தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
 
கொல்கத்தாவின் டில்ஜலா பகுதியில் வசித்துவரும் ஸ்வஸ்திகா தத்தா தனது வீட்டில் இருந்து படப்பிப்பிற்கு செல்ல வாடகை கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தார்,. அப்போது திடீரென காரை திருப்பிய ஓட்டுனர் தனக்கு வேறு ஒரு சவாரி வந்து விட்டதாகவும் அதனால் காரில் இருந்து இறங்குமாறும் கூறியுள்ளார். ஆனால் நடிகை காரில் இருந்து இறங்க மறுத்துள்ளார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கார் ஓட்டுனர் , காரில் இருந்த ஸ்வஸ்திகா தத்தாவை குண்டுகட்டாக தூக்கி காரில் இருந்து வெளியே வீசிவிட்டு அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து காவல்துறையினர்களிடம் ஸ்வஸ்தா அளித்த புகாரின் அடிப்படையில் அந்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
 
இந்த சம்பவம் குறித்த முழு விபரங்களை ஸ்வதிஸ்கா தனது முகநூலில் வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு இந்த நாட்டில் இருக்கும் பாதுகாப்பு இவ்வளவுதானா? என்று இந்த பதிவை படித்த பலர் கண்டனம் தெரிவித்து கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments