திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்.. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!

Siva
புதன், 17 டிசம்பர் 2025 (08:50 IST)
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது தேவஸ்தானம் தரப்பில் பக்தர்களுக்கான ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
அதன்படி, திருப்பதி மலை அடிவாரத்திலேயே பக்தர்களின் வசதிக்காக சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த புதிய வளாகத்தில் திருப்பதி மலைக்கு செல்வதற்கான பிரத்யேக பேருந்து நிலையம், தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யும் கவுண்டர்கள் மற்றும் இதர அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் ஒரே இடத்தில் செய்து தரப்படும்.
 
முக்கியமாக, திருப்பதி மலை அடிவாரத்திலேயே பிரம்மாண்டமான அன்னதான கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், தரிசனத்திற்கு செல்லும் முன்னரோ அல்லது தரிசனம் முடித்து திரும்பும் போதோ பக்தர்கள் மலை அடிவாரத்திலேயே உணவருந்த முடியும் என்பது பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
எனவே, இனி அறைகள் ஒதுக்கீடு மற்றும் அடிப்படை தேவைகளுக்காக திருமலை வரை சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த 20 ஏக்கர் நகர்ப்புற வளாகம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

நடு ரோட்டில் கணவருக்கு மாரடைப்பு.. லிப்ட் கேட்டு கதறிய மனைவி.. யாரும் உதவாததால் பலியான உயிர்..!

வாய தொறந்து பேசுங்க!.. கம்முன்னே இருந்தா அரசியல்வாதியா?!.. விஜயை போட்டு பொளந்த அண்ணாமலை!.

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

அடுத்த கட்டுரையில்
Show comments