Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி என்னை பாராட்டினார்… தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்ப் பெருமிதம்!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (09:49 IST)
அமெரிக்க பிரதமர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்தைத் தொட்டுள்ளது. பலி எண்ணிக்கையை 2 லட்சத்தை நெருங்குகிறது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கொரோனாவை சரியாக எதிர்கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்துவரும் ட்ரம்ப்  ’உலகிலேயே அதிக கொரோனா சோதனை செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகைக் கொண்ட நாடான இந்தியாவை விட நாம் 4.5 கோடி சோதனைகள் அதிகமாக செய்துள்ளோம். இதைக் குறிப்பிட்டு இந்திய பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் பாராட்டினார்’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சைபர் குற்றவாளியாக மாற்ற கோச்சிங் சென்டர்.. கைதானவரின் அதிர்ச்சி தகவல்..!

ரிசர்வேஷன்ல வரவங்க லஞ்சம் வாங்குறாங்க..? கஸ்தூரி சர்ச்சை பேச்சு! - நெட்டிசன்கள் கடும் கண்டனம்!

நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்றைய நிலை என்ன? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. அமெரிக்க தேர்தலுக்கு பின் உயருமா?

திருச்சியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments