Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தரையிறங்கிய விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

Japan
, செவ்வாய், 2 ஜனவரி 2024 (17:02 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விமான நிலையம் ஓடுதளத்தில் தரையிறங்கிய விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜப்பான்  நாட்டில் பிரதமர் ஃபுமியோ கிசிடா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த  நிலையில், ஜப்பான் நாட்டின் மேற்குப் பகுதியில்  நேற்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 7.4 என பதிவாகியிருந்தது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து   சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களில் சுனாமி அலைகள் தாக்கின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில்,    நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மேலும் ஒருஅதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விமான நிலையம் ஓடுதளத்தில் தரையிறங்கிய விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இவ்விபத்தில் பயணிகளுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.

தீப்பிழம்புடன் விமானம் தரையிறங்கிய நிலையில், மளமளவவென தீ எரியத் தொடங்கியதால் தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பில் ஈடுபட்டனர்.

மேலும், முற்றியலுமான எரிந்த இந்த விமானத்தில் பயணித்த 379 பயணிகளும், பணியாளர்களும் தக்க நேரத்தில்  பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில்,  5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானத்தின் மீது பயணிகள் விமானம் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் வருமான வரித்துறை சோதனை...! வரி ஏய்ப்பு புகாரில் அதிரடி.!!