Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டைட்டானிக் ஸ்டைலில் கட்டிபிடிக்கும் மோடி; காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்

Advertiesment
டைட்டானிக் ஸ்டைலில் கட்டிபிடிக்கும் மோடி; காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்
, திங்கள், 15 ஜனவரி 2018 (17:20 IST)
மோடியின் கட்டிபிடி வரவேற்பை டைட்டானிக் படத்தோடு ஒப்பிட்டு கேலி செய்து காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டதற்கு பாஜக சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 
பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும், வெளிநாட்டு பிரதமர்கள் இந்தியா வரும்போதும் நரேந்திர மோடி கைகுலுக்கி, கட்டிபிடித்து வரவேற்பது வழக்கம். பிரதமர் வரவேற்கும் விதம் கேலிக்கு ஆளாகி சமூக வலைதளங்களில் வலம் வருவது வழக்கம்.
 
இந்நிலையில் தற்போது மோடி பிற நாட்டு பிரதமர்களை கட்டிபிடித்து வரவேற்பதை டைட்டானிக் படத்துடன் ஒப்பிட்டு கேலி செய்து காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
 
இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில், காங்கிரசின் இந்த அருவருக்கதக்க செயல் அதன் பக்குவமின்மையை காட்டுகிறது. விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கும் வேளையில் மோடியின் கட்டிப்பிடி வரவேற்பை அருவருக்கதக்க வகையில் விமர்சித்துள்ளது காங்கிரசின் நிலைத் தன்மை வலுவிழந்து உள்ளது என்பதை  காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளனர்.   

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலாகலமாக மாட்டுப் பொங்கலை கொண்டாடிய கேப்டன்