Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடிக்கு 1000 நாப்கின்கள்; ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு கோரி மாணவிகள் முடிவு

மோடிக்கு 1000 நாப்கின்கள்; ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு கோரி மாணவிகள் முடிவு
, புதன், 10 ஜனவரி 2018 (13:31 IST)
மத்தியப் பிரதேச மாணவிகள், நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆயிரம் நாப்கின்களை அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

 
நாப்கின்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது முதல் இதற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக கேரள மாநிலத்தில் நாப்கின்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. 
 
பெண்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவைப்படும் நாப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கருத்தடுப்பு சாதனங்கள் மற்றும் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் போது ஏன் நாப்கின்கலை இலவசமாக வழங்கக்கூடாது என்று மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சமூக அமைப்பு ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
 
இந்நிலையில் சமூகநல அமைப்புகளை சேர்ந்த இளைஞர்களும், மாணவிகளும் நாப்கின்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர். குவாலியர் பகுதியில் உள்ள மாணவிகளும் இந்த கையெழுத்து இயக்கத்தில் இணைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்து வரும் மார்ச் 3ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆயிரம் நாப்கின்களை அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம்பெண்ணின் சடலம் ; கடனை கேட்டதால் அடித்துக் கொன்றேன் : கள்ளக்காதலன் வாக்குமூலம்