மத்திய அமைச்சரை சந்திக்க சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலத்திற்கான ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான தொகையை விடுவிக்க கோரி மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி அவர்களை சந்திக்க திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. அதையும் மீறி அவர் மத்திய அமைச்சரை சந்திக்க சென்ற போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
ஒரு கட்டத்தில் குண்டு கட்டாக அவரை தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.