நாடாளுமன்றத்திற்கு வந்து பிரதமர் அறிக்கை தரும் வரை விடமாட்டோம்: மணிப்பூர் விவகாரம் குறித்து திருச்சி சிவா..!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (07:57 IST)
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் அறிக்கை தரும் வரை விட மாட்டோம் என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். 
 
 மணிப்பூர் பிரச்சனை கொழுந்து விட்டு எரியும் நிலையில் பிரதமர் இது வரை இது குறித்து பேசவில்லை. குறைந்தபட்சம் நாடாளுமன்றத்திற்கு வந்து ஒரு அறிக்கை அளித்து இருக்க வேண்டும். 
 
மணிப்பூரில் தற்போது மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டு கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்று நாங்கள் ஒரு குழுவாக மணிப்பூர் செல்ல இருக்கிறோம். மக்கள் இந்த பிரச்சனையை கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு எதிர்க்கட்சிக்கு தயாராக இல்லை என்று சொல்வதில் உண்மை இல்லை 
 
பிரதமர் வந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும், அப்போது நாங்களும் பேச தயார், அவர் அறிக்கை அளிக்கும் வரை நாங்கள் அவரை விட மாட்டோம் என்று திருச்சி சிவா எம்பி பேட்டியில் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments