Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரியின் சஸ்பெண்ட் ரத்து!

மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரியின் சஸ்பெண்ட் ரத்து!
, வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (09:21 IST)
பிரதமர் மோடி சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரில் வந்திறங்கியபோது அவரது ஹெலிகாப்டரை அந்த பகுதியின் தேர்தல் அதிகாரி முகமது மோசின் என்பவர் சோதனை செய்தார். இதனையடுத்து மறுநாளே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் தனது பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளதாக இந்த சஸ்பெண்டுக்கு காரணமாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் தனது சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து முகமது மோசின் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், 'பிரதமரின் ஹெலிகாப்டரில் சோதனை செய்யக்கூடாது என்று விதி ஏதும் இல்லை. அவருக்கு கிடைத்த ஒரு தகவலின் அடிப்படையில் அவர் தனது கடமையை செய்துள்ளார். தேர்தல் நேரத்தில் கிடைக்கும் தகவலை சோதனை செய்து உறுதி செய்ய வேண்டியது அவரது கடமை. எனவே மோசஸ் மீதான சஸ்பெண்ட் ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது
 
webdunia
தேர்தல் நேரத்தில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வாகனங்கள் சோதனை செய்வது, வீட்டில் ரெய்டு நடப்பது போன்றவை நடந்து வரும் நிலையில் பிரதமரின் ஹெலிகாப்டரில் சோதனை செய்தவரை மட்டும் தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்தது சர்ச்சைக்குரியதாக கருதப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேட்புமனுத்தாக்கல் இரண்டு நாட்கள் குறைப்பு – வேட்பாளர்கள் அவசரம் !