Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி ரயில்கள் மின்னல் வேகம் தான்: இந்திய ரயில்வே அறிவிப்பு

Advertiesment
Train
, செவ்வாய், 4 அக்டோபர் 2022 (16:35 IST)
அனைத்து ரயில்களின் வேகமும் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
 
இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்களில் தினமும் சுமார் 2 கோடியே  பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ரயில் பாதை அட்டவணை வெளியாகியுள்ளது.
 
இதில் 500 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 130 ரயில் சேவைகள் சூப்பர் பாஸ்ட் வகையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக அனைத்து ரயில்களின் வேகமும் 5 சதவீதம் வரை  உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இதனால் பயண நேரம் குறையும் என்றும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
 
எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடப்பாண்டில் 84 சதவீதம் குறித்த நேரத்திற்குள் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டில்  75 சதவீதம் சரியான நேரத்தில் இயக்கப்பட்டதாகவும், இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
 

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? கருணாஸ் கேள்வி