Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்.. என்னதான் நடக்குது ரயில்வே துறையில்?

Mahendran
செவ்வாய், 22 அக்டோபர் 2024 (18:03 IST)
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ரயில் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே துறை இது குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும், விபத்தைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இன்றும் ஒரு ரயிலில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கலாம்னா ரயில் நிலையம் அருகே ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பும் காயமும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், பயணிகள் தங்களது சொந்த இடத்துக்கு செல்ல அனைத்து முயற்சிகளையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.

மேலும், விபத்து தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதே ரயில் நிலையத்தில் அக்டோபர் 9ஆம் தேதி உள்ளூர் ரயில் ஒன்று தடம் புரண்ட நிலையில், இன்று எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த தமிழக அரசு: எத்தனை சதவீதம்?

இன்று 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

மாத சம்பளம் ரூ. 9,000 பெறும் பெண் கூலி தொழிலாளிக்கு ரூ. 2.39 கோடி ஜிஎஸ்டி.. அதிர்ச்சி சம்பவம்..!

புதிய லோகோ.. புதிய சேவைகள்.. பட்டைய கிளப்பும் பி.எஸ்.என்.எல்..!

ரஷ்யாவில் 12 வயது மகள் வரைந்த ஓவியத்தால் சிறையிலிருந்த தந்தை விடுதலை - என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments