கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேசக் கிரிக்கெட் ஆடிவந்தாலும், போதுமான அனுபவம் இருந்தும் தேவையான நேரத்தில் கே எல் ராகுலிடம் இருந்து ஒரு நல்ல இன்னிங்ஸ் கிடைப்பதில்லை. அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதேதான் நியுசிலாந்து அணிக்கு எதிரான இன்னிங்ஸிலும் நடந்தது.
நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து பெரிய இன்னிங்ஸ் ஆடி அவுட்டான போது கே எல் ராகுல் களத்தில் இருந்தார். அவரிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கபப்ட்டது. ஆனால் அவர் வழக்கம்போல சொதப்பி வெளியேறினார். இதனால் அவரின் இடம் டெஸ்ட் அணியில் பறிபோகும் அளவுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் வர்ணனையாளர்களான ஹர்ஷா போக்லே மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் இடையில் கே எல் ராகுல் பற்றி நடந்த உரையாடலில்…
ஹர்ஷா போக்லே: கடைசியாக எப்போது கே எல் ராகுல் இந்திய அணியை ஒரு இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்றினார் என்று நினைவிருக்கிறதா?
ரவி சாஸ்திரி: இல்லை… ஏனென்றால் கே எல் ராகுலும் இந்திய அணியில் இக்கட்டான சூழலில் இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறார்.