Publish Date: Mon, 07 May 2018 (07:47 IST)
Updated Date: Mon, 07 May 2018 (07:49 IST)
தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் மணல் திருட்டு என்பது அரசியல்வாதிகளின் ஒத்துழைப்போடு சகஜமாக நடைபெற்று வருகிறது. மணல் திருட்டை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை நெல்லை மாவட்டத்தில் உள்ள பரப்பாடி என்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலைய தனிபிரிவு காவலர் ஜெகதீசன் துரை என்பவரை மணல் கொள்ளையர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர்
நம்பியாற்றில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிவந்த டிராக்டரை ஜெகதீசன் வழிமறித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் ஜெகதீஷை வெட்டி கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜெகதீசன் கொலை குறித்து உடனடியாக ஏஎஸ்பி விசாரணையில் இறங்கியுள்ளதாகவும், தலைமறைவாகியுள்ள கொலையாளிகளை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது