ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இரு ரயில்களின் டிரைவர்களும் பலியாகியுள்ளதாகவும், நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வெளியாகிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள காவல் நிலைய பகுதியில், இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தின் காரணமாக, இரண்டு சரக்கு ரயில்களும் தடம் புரண்டுள்ளன.
அதிகாலை 3 மணிக்கு நடந்த இந்த விபத்தில், இரண்டு ரயில்களின் ஓட்டுனர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அதுமட்டுமின்றி, இரண்டு உதவி ஓட்டுநர்கள் மற்றும் இரண்டு தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு ரயில்கள் எப்படி ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்தது என்பது குறித்து, ரயில்வே துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.