Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! இந்தியாவை வலுப்படுத்தும் வகையில் திட்டங்கள்! - அமெரிக்கா செல்லும் இந்திய குழு!

Prasanth K
வெள்ளி, 11 ஜூலை 2025 (09:37 IST)

அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை விவாதிக்கவும் இறுதி செய்யவும் இந்திய குழு விரைவில் அமெரிக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகளுடனான வர்த்தகத்தில் பரஸ்பர வரிவிதிப்பை மேற்கொண்ட நிலையில் பின்னர் அதை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். இதற்கிடையே அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராகி வருவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

 

அதன்படி இந்தியாவும் அமெரிக்காவுடன் இரு நாடுகளும் பயன்பெறும் வகையிலான புதிய வரி ஒப்பந்தத்தை மேற்கொள்ள விவாதித்து வருகிறது. ஆரம்பமாக இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஒன்றையும், அடுத்த சில மாதங்களில் முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது.

 

இதற்காக அமெரிக்கா சென்ற இந்திய வர்த்தக துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழு சமீபத்தில் டெல்லி திரும்பிய நிலையில், மீண்டும் வரி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்காக அடுத்த சில வாரங்களில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்த புதிய வரி ஒப்பந்தம் இரு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கும் நன்மை செய்யும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments