விஜய்க்கு 20% வாக்குகள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்: பத்திரிகையாளர் மணி

Siva
வெள்ளி, 11 ஜூலை 2025 (09:15 IST)
தமிழகத்தில் விஜய்க்கு 15 முதல் 20% வாக்குகள் இருக்கிறது என்று பிரசாந்த் கிஷோர் கூறியதை நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று பத்திரிகையாளர் மணி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு 10 முதல் 20% வாக்குகள் இருப்பதாக பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், பிரசாந்த் கிஷோர் 20% வாக்குகள் வரை விஜய்க்கு கிடைக்கும் என்று கூறியிருந்தார். இருப்பினும், அவர் தற்போது பீகார் தேர்தல் பணி காரணமாக இப்போதைக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு தன்னால் வேலை செய்ய முடியாது என்று கூறி ஒதுங்கிவிட்டார்.
 
இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் கூறியது போல் விஜய்க்கு 20 சதவீத வாக்குகள் இருப்பதை தான் ஒப்புக்கொள்வதாக பத்திரிகையாளர் மணி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால், அதே நேரத்தில், "விஜய் தனித்து நின்றால் ஆட்சி அமைக்க முடியாது என்றும், எதிர்க்கட்சித் தலைவராகக் கூட முடியாது என்றும், ஒன்று பாஜக இல்லாத அதிமுக உடன் கூட்டணி சேர வேண்டும் அல்லது ஒரு தனி அணியை அமைக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார். 
 
கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் 20% வாக்குகளை விஜய் பெற்றுள்ளார் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments