Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

#TractorsVsTraitors: விவசாயிகளுக்கு ஆதரவாக டிவிட்டரில் தெறிக்கும் பதிவுகள்!

Advertiesment
#TractorsVsTraitors: விவசாயிகளுக்கு ஆதரவாக டிவிட்டரில் தெறிக்கும் பதிவுகள்!
, செவ்வாய், 26 ஜனவரி 2021 (07:58 IST)
சமூகவலைத்தளமான டிவிட்டரில் #TractorsVsTraitors என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கி வருகின்றனர். 
 
சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இன்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நாளில் அதே இடத்தில் டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்தது. இதற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் டெல்லியை நோக்கி படையெடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்த இருக்கும் நிலையில் குடியரசு தின நிகழ்வுகளின் போது பிற மாநில விவசாயிகள் டெல்லியில் புகாமல் இருக்க பிரம்மாண்டமான தடுப்பு நடவடிக்கைகளை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
 
இந்த நடவடிக்கையையும் மீறி டெல்லிக்குள் டிராக்டர்களை கொண்டு செல்ல விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே சமூகவலைத்தளமான டிவிட்டரில் #TractorsVsTraitors என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கின் கீழ் விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவுகளை போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடு முழுவதும் 1,138 ரயில்கள் இயக்கம்: கொரோனா பரவல் மத்தியிலும் சாதனை!