குஜராத் மாநிலத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், 12 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் ஹரணியில் உள்ள மோட் நாத் ஏரியில் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் படகு சவாரியில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில், 23 பள்ளி மாணவர்களும், 4 ஆசிரியர்களும் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமான படகு மூழ்கி 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 12 மாணவர்கள் பலியாகினர்.
மீட்பு பணிகள் நடந்து வருகிறது. குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். அதேபோல், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி அளித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.