Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயர் அதிகாரிகளுக்கு இனிமேல் சல்யூட் அடிக்கத்தேவையில்லை - ரூபா ஐபிஎஸ்

Advertiesment
உயர் அதிகாரிகளுக்கு இனிமேல் சல்யூட் அடிக்கத்தேவையில்லை -  ரூபா ஐபிஎஸ்
, புதன், 11 நவம்பர் 2020 (17:09 IST)
கர்நாடக மாநில ஐபிஎஸ் அதிகாரியும் , மாநில உள்துறைச் செயலாளருமான ரூபா தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர். இவர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில்,  போக்குவரத்து காவலர்கள் சாலையில் பணியில் ஈடுபட்டிருக்கும்போது உயர் போலீஸ் அதிகாரிகள் வாகத்தில் செல்லும்போது அவர்களுக்கு சல்யூட் அடிக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அம்மாநில டிஜிபி ரவிகாந்தே கவுடாவின் கவனத்திற்கு கொண்டு வரவிடும்பியே தான் இதைக் கூறியுள்ளதாகவும் தெரவித்துள்ளார்.

மேலும், போக்குவரத்துக் காவலர்கள் சல்யூட் அடிக்காமல் கடமையைச் சரியாகச் செய்தாலே போது, இதன் மூலம் போக்குவரத்து போலீஸார் தங்கள் உயிரையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும், வாகன் ஓட்டிகளையும் பாதுகாக்க முடிவும் எனத் தெரிவித்துள்ளார்.

சசிகலா டிஜிபிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக ஆதாரப்பூர்வமாகக் கூறினார். சிறையிலிருந்து ஷாப்பிங் சென்றதாகக் கூறியவர் இவர்தான். பின்னர் போக்குவரத்துறை டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டார் எனபது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேல் யாத்திரைக்கு அனுமதி தராத முதல்வருக்கு நன்றி: இல கணேசன்